காதலர் தினச் சலுகையாக ரூ.899-க்கு எக்கனாமி டிக்கெட்.. விமான நிறுவனம் ஆஃபர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 13, 2019 03:13 PM

காதலர் தின சலுகையாக ரூ. 899-க்கு எக்கனாமி வகுப்பில் விமானப் பயணம் செய்யலாம் என்ற தகவலையொட்டி இன்னும் பிற சலுகைகளையும் அளித்துள்ளது விஸ்தரா ஏர்லைன்ஸ்.

valentine day Special - Flight offers economy class from 899 rupees

தமிழகத்தில் விசேஷ நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் பஸ் கட்டணங்கள் உயர்வால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை நாம் பார்ப்பதுண்டு. ஆனால் விஸ்தரா ஏர்லைன்ஸ் காதலர் தினத்தன்று தனது டிக்கெட் விலையை குறைத்து விமான பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. எக்கனாமி, பிரீமியம் எக்கனாமி, பிஸ்னஸ் கிளாஸ் என்று மூன்று தரப்பட்ட வகுப்புகளை கொண்டு இந்த ஏர்லைன்ஸின் டிக்கெட் பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் காதலர் தினச் சலுகையாக ரூ.899-க்கு எக்கனாமி டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி ரூ.1499-க்கு பிரீமியம் எக்கனாமி வகுப்பு டிக்கெட்டும் ரூ. 5499 க்கு பிஸ்னஸ் கிளாஸ் வகுப்பு டிக்கெட்டுகளும் விற்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் மட்டும் கிடைக்கும் இந்த டிக்கெட்டுகளின் உதவிகொண்டு பிப்ரவரி 27 முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரையிலான கால அவகாசத்தில் பயணம் செய்யலாம் என விஸ்தரா நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த விமான டிக்கெட்டுகளை airvistara.com மற்றும் விஸ்தரா ஐ-ஓஎஸ் செயலி, ஆண்ட்ராய்டு செயலி போன்றவற்றின் உதவியால் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடி டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் ஏஜண்ட்கள் மூலமாகவும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #VALENTINE DAY #FLIGHT #AIRPLANE