All
Looks like you've blocked notifications!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் வங்காள தேசம் அணியுடனான, முத்தரப்பு 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது.

 

இந்நிலையில், தங்களது ஓய்வு நேரத்தில் இந்திய அணியினர் ஹோட்டல் ஒன்றுக்கு உணவருந்த சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இசைக்குழுவினர் பல்வேறு பாலிவுட் பாடல்களைப் பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்துள்ளனர்.

 

இதனைப்பார்த்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, இசைக்குழுவுடன் இணைந்து தானும் ஒரு கிளாசிக்கான பாலிவுட் பாடலைப் பாடி அசத்தியுள்ளார். சக இந்திய வீரர்களால் ரசித்து மகிழப்பட்ட இந்த வீடியோவை, பிசிசிஐ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 


 

BY SATHEESH | MAR 12, 2018 11:37 AM #SURESHRAINA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People