கொஞ்சம் சத்தமா சொல்லிப்பாருங்களேன் முதலமைச்சரே?

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 24, 2018 05:56 PM
Ramadoss tweets about Edappadi Palaniswami

சமீபத்திய சட்டப்பேரவை நிகழ்வின்போது பாஜக-வை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம் என, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் பாரதிய ஜனதாவுக்கு அடிமை இல்லை. பாஜகவை எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்பேன்: எடப்பாடி பழனிச்சாமி -அப்படியா.... கொஞ்சம் சத்தமா சொல்லிப் பாருங்களேன் முதலமைச்சரே?,'' என ட்வீட் செய்துள்ளார்.

 

இதேபோல மற்றுமொரு ட்வீட்டில், ''தில்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை சந்திக்க மறுத்தது அவமானம் தான். ஆனாலும், அவர் ஹெலிகாப்டர் கொடுத்ததற்காக தாங்கிக் கொண்டேன்: ஓ.பன்னீர்செல்வம் - இது என்ன புதிதா? இதையெல்லாம் பார்த்தால் சி.எம்.டி.ஏ, வீட்டுவசதின்னு கோடிகளை பார்க்க முடியுமா?,'' என தெரிவித்துள்ளார்.