தங்கியிருந்த கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; விடுதி உரிமையாளருக்கு வலைவீச்சு

Home > News Shots > தமிழ்

By |
Private hostel owner, lady warden harassing college girls Coimbatore

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக விடுதியின் உரிமையாளர் மற்றும் பெண் வார்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விடுதி உரிமையாளரான 48 வயது ஜெகநாதன் மற்றும் 32 வயது பெண் வார்டன் புனிதா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


சில நாட்களுக்கு முன் ஜெகநாதனுக்கு பிறந்த நாள் என்று கூறி கோவை ஆர் எஸ் புரம் பகுதியிலுள்ள தனியார் விடுதிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற புனிதா அவர்களை மது அருந்த கட்டாயப் படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகநாதனுக்கு வீடியோ கால் செய்த அந்த பெண் வார்டன் மாணவிகள் விடுதி உரிமையாளர் மகிழ்ச்சியடையும் படி செயல்பட்டால் விடுதிக்கட்டணம் கூட கட்டத்தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் விடுதிக்குத் திரும்பிய பின் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் இதற்கிடையில் ஜெகநாதனும் புனிதாவும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.


இருவரின் மீதும் பெண்கள் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #HOSTELOWNERBOOKED #LADYWARDENBOOKED #COIMBATORE