ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்.. பார்சலை பிரித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 19, 2018 07:33 PM
Man who ordered cellphone through online, get cheated by fraudsters

ஆன்லைன் ஷாப்பிங் தற்காலத்தில் பெரிய அளவுக்கு வலுவாக இருக்கும் மார்க்கெட்டுகளில் முக்கியமானதாக உள்ளது. மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தொடங்கி, என்றாவது அவசியப்படும் பொருட்கள்,  ‘அட எதுக்குமே உதவலனாலும் சும்மா வாங்கி போடுங்க’ ரக பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன. இவ்வளவு ஏன், மதுவைக் கூட ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்ய முன்வந்துள்ளது மஹாராஷ்டிர மாநிலம்.


எனினும் செல்போன்கள் உள்ளிட்ட முக்கியமான எலக்ட்ரானிக் பொருட்களை பலரும் ஆன்லைனில் வாங்குவதை தவிர்க்கின்றனர். காரணம் அவற்றில் ஓட்டை, உடைசல் இருந்தால்  திரும்பவும் மாற்றுவதில் இருக்கும் நடைமுறை அசௌகரியங்கள்தான். இந்த நிலையில் அவுரங்காபாத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.9,134 செலுத்தி செலுத்தி செல்போன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவர், பார்சலை பிரித்து பார்த்த்தபோது, அதில் இருந்ததோ செங்கல்தான்.  அதிர்ச்சியும் மிரட்சியும் கலந்த உச்சகட்டத்திற்கு சென்றவர், பார்சல் டெலிவரி பாய்க்கு போன் செய்து கேட்டிருக்கிறார். ஆனால், டெலிவரி மேனோ, ‘பார்சலை உரியவரிடம் சென்று சேர்ப்பது மட்டுமே எங்கள் வேலை; அதனுள்  என்ன இருக்கிறது என்பது எங்கள் வேலை அல்ல’ என்று தடாலடியாகக் கூறியிருக்கிறார்.

 

ஏமாந்த வாடிக்கையாளர் இதுகுறித்து ஹர்சூல் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் மணிஷ் கல்யான்கரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கஜானன் கரத் செல்போன் ஆர்டர் செய்த செல்போன் இ-காமர்ஸ் தளத்திலிருந்து ஒருவாரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று அவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : #SMARTPHONE #ONLINESHOPPING #E-COMMERCE #FORGERY