இந்த 13 கொடிய கேம்கள் உங்கள் போனில் இருந்தா உடனடியா நீக்கிடுங்க: கூகுள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 24, 2018 12:48 PM
Google removes 13 games from android playstore which causes malware

ஆண்ராய்டு போன்களில், அப்ளிகேஷன்கள் அல்லது ஆப் அல்லது செயலிகள் மூலமாகவே நம் போனில் வைரஸ்கள் என்றறியப்படும் மால்வேர்கள் உள்நுழைகின்றன.  இவற்றை, போன்களுக்கு ஒரு கொடிய நோயைப் போலத்தான், மெல்ல உள் நுழைந்து நம் போனின் அந்தரங்கங்களை கண்காணித்தும், டேட்டாக்களை நோட்டமிட்டும், வங்கிக் கணக்குகள் தொடங்கி வாட்ஸாப் சாட் ஹிஸ்டரி உட்பட எவற்றையும் களவாடி லீக் செய்துவிடும் சக்தி வாய்ந்த சாத்தான்கள் எனலாம்.

 

இந்நிலையில் அண்மையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இதுபோன்ற மால்வேர்களை செல்போன்களில் விட்டுவிட்டுச் செல்லும் 13 கேம்களை இஎஸ்இடி சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த லூகாஸ் ஸ்டீபன்கோ கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சியலையையும் எச்சரிக்கையினையும் ஏற்படுத்தினார்.

 

இதன்படி லூயிஸ் ஓ பிண்டோ என்கிற ஒரே டெவலப்பரினால் உருவாக்கபட்டிருக்கும் டிரக் கார்கோ சிமிலேட்ர், ஹைப்பர் கார் டிரைவிங், எக்ஸ்ட்ரீம் கார் டிரைவிங், ஃபைர் ஃபைட்டர் போன்ற 13 வகை கேம்கள் (பெரும்பாலும் கார் ரேஸ் கேம்கள்) இந்த மால்வேரை ஆண்ராய்டு போன்களில் உற்பத்தி செய்துள்ளதாக குறிப்பிடும் இந்த ஆராய்ச்சியாளர், இந்த கேம்கள் டவுன்லோடு ஆகி,  ஓபன் செய்யும்பொருட்டு ஐகானை கிளிக் செய்தால் கிராஷ் ஆகும்.

 

ஆனாலும் அந்த செயலிகள் போனில் மறைவாகவே இயங்கிக் கொண்டிருப்பதோரு, ஏபிகே எனப்படும் குறிப்பிட்ட முறையில் நம் போனில் இருக்கும் விபரங்களை திருடச் செய்யும் என்று அதிர வைக்கிறார். 5.6 லட்சம் பேருக்கு மேற்பட்ட பயனாளர்களால் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட இந்த தீமையான கேம்களை, இஸ்தான்புல் நகரத்தைச் சேர்ந்த டெவலப்பர் உருவாக்கியிருப்பதாகவும் இவற்றி அறிந்த கூகுள் நிறுவனம் இந்த 13 கேம்களையும் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளாதகவும் தெரிகிறது.

 

பயனாளர்களின் பாதுகாப்பே தங்கள் முதல் நோக்கம் என்றும், இதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தவர்களுக்கு நன்றிகள் என்றும் கூகுள் கூறியுள்ளதோடு,  இதுபோன்ற ஆப்கள் செல்போனில் இருந்தால் அன் - இன்ஸ்டால் செய்துவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு கூகுள் பாலிசி விதிமுறைகளை மீறிய 7 லட்சம் ஆப்களை தங்கள் தொழில்முறை ஒப்பந்த உறவில் இருந்து நீக்கிய கூகுள், மேலும் 1 லட்சம் முறைகேடான ஆப்களையும் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #GOOGLE #ANDROID #13GAMES #MALWARE #PLAYSTORE #CARRACE #HYPERCARDRIVING #EXTREMECARDRIVING #FIREFIGHTER