"வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு"...சரமாரியாக சண்டையிட்டு கொன்ற பூனை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 31, 2018 01:09 PM
Fearless cat attacks a snake for two minutes video goes viral

வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பினை பூனை ஒன்று,சரமாரியாக சண்டையிட்டு கொன்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

வியட்நாம் நாட்டின் யேன் பாய் என்ற பகுதியில் வீடிற்குள் பாம்பு ஒன்று நுழைய முற்பட்டது.அப்போது அங்கிருந்த பூனை ஒன்று பாம்போடு சரமாரியாக சண்டையிட்டது.சண்டையின்  இறுதியில் பாம்பை சரமாரியாக தாக்கி கொன்றது பூனை.பாம்பானது, பூனையின் முன்னங்கால் மற்றும் நகங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டது.

 

முதலில் எதிர்ப்புத் தெரித்த பாம்பு, அங்கிருந்தபடியே பூனையைக் கடிக்க முயன்றது, ஆனால் இறுதியில் சோர்ந்து போன அந்தப் பாம்பு மயக்கநிலைக்குச் சென்று உயிரிழந்தது.பூனை சண்டையிட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #FEARLESS CAT #SNAKE #VIETNAM #YEN BAI