'இது காதலுக்கான உரிமை'... ஓரினச்சேர்க்கை தீர்ப்பைப் புகழும் பிரபலங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 06, 2018 04:21 PM
Famous personalities welcome SC\'s verdict on Sec 377

இந்திய சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரும் இந்தத் தீர்ப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

 

அனுஷ்கா சர்மா:

காதல் மிகப்பெரிய அடி ஒன்றை எடுத்து வைத்துள்ளது.இது காதலுக்கான உரிமை.

 

 

அமீர்கான்:

சட்ட பிரிவு 377-ஐ நீக்கும் உச்சநீதிமன்ற முடிவிற்கு நன்றி. அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று நினைக்கும் மக்களுக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது, இப்போது நாம் நம்முடையதை செய்ய வேண்டும்.

 

 

கனிமொழி(எம்.பி):

 நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

 

 

பூமி படேகர்:

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்.எனது தேசத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்.எந்த பாகுபாடும்,வெறுப்பும் இல்லாமல் எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கி உள்ளது.

Tags : #KANIMOZHI #ANUSHKASHARMA #SUPREMECOURT