'பிரியா வாரியர்' கண்சிமிட்டியதில் தவறில்லை: உச்சநீதிமன்றம்

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 31, 2018 12:07 PM
Supreme Court quashes FIR against Priya Prakash Varrier

'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற, மாணிக்ய மலராய பூவி பாடலில் இடம்பெற்ற  நடிகை பிரியா வாரியரின் கண் சிமிட்டல்கள் மற்றும் புருவ அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

ஆனால் இந்த பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி, இஸ்லாமிய மத உணர்வைப் புண்படுத்தியதாக ஐதாராபாத் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவரால் வழக்குத் தொடரப்பட்டது.

 

தொடர்ந்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிரியா வாரியர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்தநிலையில் மலையாள பாடலில் நடிகை பிரியா வாரியர் கண் சிமிட்டியதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் எதுவும் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

 

தொடர்ந்து பிரியா வாரியருக்கு எதிரான, ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞரின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : #SUPREMECOURT #PRIYAPRAKASHVARRIER