’பட்டாக்கத்தி பாய்ஸை’ அடித்து வெளுக்கும் பெற்றோர்.. வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 31, 2018 06:51 PM
chennai college students cause anxiety travel has beaten by parents

சென்னை காரனோடை முதல் பாரிமுனை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தின் தடம் எண் 57fல் நேற்றைய தினம் மாணவர்கள் சிலர் கைகளில் பெரிய பெரிய பட்டா கத்திகளை காட்டியும், பேருந்தில் இருந்தபடியே,  சாலையில் பட்டை தீட்டியும் பயணித்தனர். இதனால் பயணிகள் பலரும் பயம் கொண்டனர். இவ்வாறு பயணிகளை  அச்சுறுத்தி  மாணவர்கள் பயணித்ததை அவ்வழியே வண்டி ஓட்டிச் சென்ற சிலர்  வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

 

இதனை அடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட  4 கல்லூரி மாணவர்களும், அதே பேருந்து பயணத்தில் ஈடுபட்ட ஆனந்தராஜ் என்பவர் அளித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அம்மாணவர்களை அவர்களி பெற்றோர்கள் அடிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறினால், அனைத்து மாணவர்களும் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், குடும்பம்-நண்பர்கள்-பிறர் என எல்லாரிடமும் அன்பாக உதவும் மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியுள்ளார்.

Tags : #COLLEGESTUDENT #COLLEGESTUDENTS #PATTAKATHIBOYS #CHENNAISTUDENTS