பட்டா கத்தியுடன் பயணம்.. பதறவைத்த சென்னை மாணவர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 30, 2018 04:06 PM
Chennai students cause anxiety, travel with knife

பேருந்துகளில் மாணவர்கள் அட்ராசிட்டி செய்வது போன்றவற்றை 80களில் வெளிவந்த சினிமாக்களில் வரும் பேருந்து காட்சிகளில் காண முடியும். அதன் பிறகு வெவ்வேறு காலக்கட்டத்தை தாண்டி பல வளர்ச்சிகளை நகரம் அடைந்திருக்கிறது. பலரும் படித்து நாகரிகமாக பணிபுரிகின்றனர்.  இருப்பினும் சென்னையின் மைய பகுதியில் இளைஞர்கள் செய்துள்ள காரியம் பலரிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சென்னை காரனோடை முதல் பாரிமுனை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தின் தடம் எண் 57f.இந்த பேருந்தில் பல கல்லூரி மாணவர்கள் தினசரி பயணம் செய்வதுண்டு.

 

இந்நிலையில் இந்த பேருந்தில் இன்றைய தினம் காலையில், அலுவலக நேரத்தில் சென்னையின் மாதவரம் பக்கமாக வந்துகொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் கைகளில் பெரிய பெரிய பட்டா கத்திகளை காட்டியும், பேருந்தில் இருந்தபடியே,  சாலையில் பட்டை தீட்டியும் செல்பவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். இதனை, பேருந்தின் அருகே வண்டி ஓட்டிச் சென்ற சிலர்  வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தகவல் அறிந்த சென்னை மாநகர காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அம்மாணவர்களைப் பற்றி விசாரித்ததில், இன்று பேருந்தி தினம் கொண்டாடும் விதத்தில் அவர்கள் இப்படி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.