திருமணம் எப்போது?.. சஞ்சீவ்-ஆல்யா ஜோடியின் 'பதில்' இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 16, 2018 07:08 PM
#BehindwoodsGoldMedals2018: Best Popular Television Award Sanjeev-Alya

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

 

இதில் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவருக்கும் சிறந்த சின்னத்திரை ஜோடி விருது பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது. இவர்களுக்கான விருதை பிக்பாஸ் புகழ் சுஜா வருணீ-சிவக்குமார் தம்பதியர் வழங்கினர்.

 

தொடர்ந்து உங்க ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம்? என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க பதிலுக்கு ஆல்யா மானசா, ''இன்னும் டிசைட் பண்ணல மேரேஜ் பத்தி. நடிப்புல இன்னும் நெறைய கத்துக்கணும் என்றார். தொடர்ந்து இளசுகளின் பேவரைட் 'சின்ன மச்சான்' பாடலுக்கு சஞ்சீவ்-ஆல்யா இருவரும் சிறப்பாக நடனமாடினர்.

Tags : #BEHINDWOODSEXCLUSIVE #BEHINDWOODSGOLDMEDALS2018