'இதுதான் காட்டுத்தனமாக பௌலிங் போல'...15 பந்தில் இத்தனை விக்கெட்டா...அசத்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 27, 2018 01:21 PM
6 wickets for 4 runs in 15 balls: Trent Boult dismantles Sri Lanka

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்,தனது அசத்தலான பௌலிங்கால் இலங்கை அணியை திக்குமுக்காடி போகச் செய்துள்ளார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்  பவுல்ட்.

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் வெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 178 ரன்கள் எடுத்திருந்தது.

 

இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவின் முதல் இன்னிங்சில்,இலங்கை அணி 4விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பவுல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.இதனால் இலங்கை அணி 104 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.

Tags : #SRILANKA #TRENT BOULT #NEW ZEALAND