மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதி இருந்தது. அர்ஜென்டினா அணியில் ஆடி வரும்  நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையில் இந்த முறை அந்த அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்தும் வந்தனர்.

கப்பு முக்கியம் பிகிலு.. 1930 முதல் 2022 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA World Cup
கப்பு முக்கியம் பிகிலு.. 1930 முதல் 2022 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA WORLD CUP

உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022-ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடந்தது.

இதன் முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை வகிக்க, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்ததால், அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆடி போயினர். இதன் பின்னர், கூடுதல் நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, போட்டி முடிய ஒரு சில நிமிடம் இருக்கும் போது, எம்பாப்பே பெனால்ட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் சேர்த்து 3 - 3 என்ற கணக்கில் இருந்ததால், பின்னர் பெனால்டி சுற்றுக்கு போனது.

பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா. இதனால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அது மட்டுமில்லாமல், இந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் வெற்றிக்காக பெரிய பங்காற்றி இருந்த மெஸ்ஸியையும் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் 1930 முதல் இன்றுவரை உலகக்கோப்பையில் வென்ற அணிகள் குறித்து பார்க்கலாம்.