கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில்  பரவி வரும் ஓமிக்ரான்  வகை கொரோனா வைரஸ் மீதான அச்சம் ஆப்பிரிக்க நாடுகளை தாண்டி, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அச்சம் அதிகரித்துள்ளது. இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளும் ஓமிக்ரான் வைரஸை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர யோசித்து வருகிறது. ஏற்கனவே பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து விட்டன.

ஓமிக்ரான் ஏன் ஆபத்தானது
ஓமிக்ரான் ஏன் ஆபத்தானது

உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது.  மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் தான் இது அதிக ஆபத்து கொண்டதாக உள்ளதாக  உலக சுகாதார மைய விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.