இந்த கொரோனா சூழலில் நிறுவனங்கள் பலவும் நிதிப் பற்றாக்குறையினால் தடுமாறுவதால், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்தி முதலீட்டை கட்டுப்படுத்தி புதிய வியூகத்தை கையில் எடுக்கின்றன.

இந்த சூழலிலும் வேலையை தக்கவைத்துக்கொள்ளவும், அல்லது புதிய நிறுவனங்களில் வேலையில் நுழைந்து அங்கு பணிபுரியவும் நினைப்பவர்களுக்கு, எக்காலமும் இந்த 3 உத்திகள் உதவும் என்று  GlobalGyan Academy-யின் Founder & CEO Srinivasa Addepalli எழுதிய ஒரு கட்டுரையின் சாராம்சத்தை தெரிந்துகொள்ளலாம்.

"தனித்துவமா இருங்க!"
"தனித்துவமா இருங்க!"

ஒவ்வொருவரின் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தை மிகவும் போட்டி நிறைந்துள்ளதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்ததுடன் வேலை என்கிற சந்தையில் நுழைகிறார்கள். ஒரு சிறந்த  கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் 1% பேரில் நீங்கள் இல்லாவிட்டால், உங்கள் கல்வி பின்னணி தனித்து நிற்க உதவும்.

‘வாடிக்கையாளர்கள்’ உங்கள் தயாரிப்புத் திறன்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற உறுதியான அம்சங்களைப் பற்றி மட்டுமல்லாமல், உங்கள் உறுதிப்பாடு, பச்சாத்தாபம் மற்றும் மதிப்புகள் போன்றவற்றில் உள்ள தெளிவற்ற விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். ஆக, ஒரு உற்பத்தி நிறுவன முதலாளி அக்கறை கொள்ளக்கூடிய அணுகுமுறையை நிரூபிக்கும் ஏதாவது ஒன்றை செய்தவர்களா நீங்கள் என்பதுதான் நீங்கள் வேலை எனும் சந்தையில் நுழையும்போது உங்கள் கண் முன்னால் இருக்கும் முக்கிய சவால்.

இதேபோல்தான், ஒவ்வொரு முறையும் நீங்கள் பதவி உயர்வு, புதிய வேலை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு வேலையைத் தொடரும்போது, ​​பலருக்கு மத்தியில் நீங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுதான் தேர்ந்தெடுக்கப் படுகிறீர்கள். ஆகையால் நீங்கள் தேர்வு செய்யப்படுவதற்கு, உங்களை நீங்க தக்கவைக்கவும், உங்களது தனித்துவம் முக்கியமானது.