டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்துள்ள நிலையில், பலரும் டிக்டாக்கினை இழந்து, வலது கையை இழந்தது போல் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சீனாவின் டிக்டாக்கிற்கு மாற்றாக சில இந்திய ஆப்கள் பற்றிய தகவல்கள் வலம் வருகின்றன.

டிக்டாக்-உடன் தடை செய்யப்பட்ட 59 சீன ஆப்கள்!
டிக்டாக்-உடன் தடை செய்யப்பட்ட 59 சீன ஆப்கள்!

உலகளவில், 2 பில்லியன் மக்கள் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் நிலையில் , 611 மில்லியன் பயனாளிகளுடன் டிக்டாக்கை பெரிய அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் தடை செய்யப்படும் சீனாவின் 59 ஆப்களுடள் டிக்டாக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே டிக்டாக்கிற்கு மாற்றாக சில இந்திய ஆப்கள் வைரலாகி வருகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.