சென்னை:  ஐபிஎல் மெகா ஏலம்  விரைவில் நடைபெற உள்ள சூழலில்  'சிஎஸ்கே' அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் தட்டித் தூக்க வாய்ப்புள்ள வீரர்கள் லிஸ்ட் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Faf Du Plessis
FAF DU PLESSIS

 

சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு, கோப்பையைக் கைப்பற்ற முக்கிய பங்காற்றியவர் பாப் டு பிளஸ்ஸிஸ். கடந்த சீசனில், 633 ரன்கள் எடுத்த இவர், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ், 635 ரன்கள் எடுத்து முதலிடமும் பிடித்திருந்தார்.

தென்னாப்பிரிக்க அணியில் ஓய்வினை அறிவித்து விட்ட டு பிளஸ்ஸிஸ், கடந்த சில ஐபிஎல் சீசன்களில், சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு, சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், வெளியேறிய போதும், டு பிளஸ்ஸிஸ் சிறப்பாகவே பேட்டிங் செய்திருந்தார்.

இனி வரும் காலங்களில், இளம் அணியை உருவாக்க சிஎஸ்கே திட்டம் போட்டு வருகிறது. இதனால், 37 வயதாகும் டு பிளஸ்ஸிஸை அணியில் எடுப்பார்களா என்ற கேள்வி எழலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக தொடக்க ஜோடி சிறப்பாக ஆடி வருவதால், அந்த பிணைப்பைத் தவற விட வேண்டாம் என சிஎஸ்கே திட்டம் போட்டால், நிச்சயம் ஐபிஎல் ஏலத்தில் டு ப்ளஸ்ஸிஸை சிஎஸ்கே தட்டித் தூக்கலாம்.