சென்னை பாக்ஸ் ஆபீஸ்- அடிச்சிதூக்கும் அஜித்தின் ‘விஸ்வாசம்’வசூல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித்-நயன்தாரா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Chennai Box Office Report- Ajith's Viswasam to be a Block Buster film

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 4வது முறையாக இணைந்த அஜித்-சிவா கூட்டணியில் உருவான ‘விஸ்வாசம்’ திரைப்படம் அப்பா-மகள் இடையேயான பாச பிணைப்பை மையப்படுத்தி குடும்ப பின்னணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படம் வெளியாகி தொடர்ந்து 3 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரப்படி, 3 வாரங்களில் ரூ.11.37 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தை பிடித்து, இப்படம் பிளாக் பஸ்டர் அந்தஸ்தை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.

Behindwoods பாக்ஸ் ஆபீஸ் ஆய்வுக்குழுவின் கணக்குப்படி, தற்போது வரை வார இறுதிநாட்களில் மட்டும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் சுமார் 258 காட்சிகள் திரையடப்படுகின்றன.  இவை அனைத்தும் தோராயமாக கணிக்கப்பட்ட வசூல் நிலவரமாகும். இதே நிலை நீடித்தால் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வசூல் வார நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.