அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை ஆரத் தழுவிய விஸ்வாசம் சிவா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்ஜே வாக இருந்து வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவா.

Shiva's hug for viswasam director Siva

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ஸ்பூஃப் வகைப்படமான தமிழ் படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டாராக தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து 2018ல் வெளியான  தமிழ்படம் 2 வில் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழக அரசியலும் ஸ்பூஃப் செய்யப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. 

இந்நிலையில் அண்மையில் நடந்த Behindwoods gold medal விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அரங்குக்குள் அவர் நுழையும் மிகுந்த ஆரவாரமும் கைத்தட்டலும் அவருக்கு கிடைத்தது.

அப்போது அவரது அருகில் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவாவும் உடனிருந்தார்.
இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்  கொண்டனர்.

அப்போது தொகுப்பாளர் சிவாவிடம் உங்கள வருங்கால ஜனாதிபதினு சொல்றாங்களேனு கேட்டார், அதற்கு  அவரது பாணியிலேயே, நீங்கள் நல்லா கேட்ருக்க மாட்டீங்க. அது பிரதமர்ங்க னு நக்கலாக பதில் அளித்தார்.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை ஆரத் தழுவிய விஸ்வாசம் சிவா VIDEO