ஹிந்திக்கு செல்கிறது காஞ்சனா - ஹீரோ யார் தெரியுமா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ராகவா லாரண்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவரை பேய் படங்களானவே திகில் காட்சிகள் மட்டும் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி காமெடி கலந்து குழந்தைகளும் ரசிக்கும் வண்ணம் மாற்றினார்.

Raghava Lawrence's Kanchana - 1 will remade in Hindi starring akshaykumar

அதன் காரணமாக இந்த படத்துக்கு குடும்பம் சகிதம் படையெடுக்க இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இதே ஜானரில் பல படங்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரண்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கிறார். சரத்குமார் வேடத்துக்கு பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தை ராகவா லாரண்ஸே ஹிந்தியில் இயக்கவிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.