காஞ்சனா 3 எப்படி இருக்கும் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் காமெடி ஹாரர் என்ற புதிய ஜானரை அறிமுகப்படுத்தியது என்றே சொல்லலாம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. அதனைத் தொடர்ந்து அதே போன்று தொடர்ச்சியாக காமெடி படங்கள் வெளியாகத் தொடங்கியது.

Raghava Lawrence's Kanchana 3 Movie new promo released

அதன் பின்னர் வெளியான காஞ்சனா 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அவர் காஞ்சனா 3 படத்தை உருவாக்கிவருகிறார்.

இந்த படத்தில் ராகவா லாரண்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா தேவதர்ஷ்னி, ஸ்ரீமன் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைநது தயாரிக்கிறது.  இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

காஞ்சனா 3 எப்படி இருக்கும் ? VIDEO