இளம் ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் கன்னித்தீவு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் பாலு தாந்து அடுத்த திரைப்படத்தில் ஷூட்டிங் பணிகளை துவக்கியுள்ளார்.

Varalakshmi Sarathkumar and Aishwarya Dutta starrer Kannitheevu shoot began

‘கன்னித்தீவு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்,‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘மாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் இளம் ஹீரோயின்களான பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

புதுப்படம் குறித்த அறிவிப்பினை நடிகைகள்தங்களது ட்விட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர்.