அஜித்குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்கான ரகசியம் குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெஹந்தி சர்கஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்காக படம் எடுத்து வந்த நிலையில், தற்போது சூழல் மாறியுள்ளது. குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு மக்கள் வருவதை கண்டு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை எடுக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு உதாரணம் சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறுகிறது என்று கரு.பழனியப்பன் தெரிவித்தார்.
மேலும், ஷான் ரோல்டன் பெயருக்கு விளக்கம் கேட்டபோது, தமிழகத்தில் பெயரை வைத்து ஜாதியை கண்டுப்பிடித்துவிடுகிறார்கள். இப்போ முடியாது பாருங்க என்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் தன் ஜாதியை மறைப்பதற்காக புதிய பெயரை வைத்துக் கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.
