நடிகையை திருமணம் செய்த 8 தோட்டாக்கள் இயக்குநர்
நடிகையை திருமணம் செய்த 8 தோட்டாக்கள் இயக்குநர்

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்து பின் சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார் ஸ்ரீ கணேஷ். இந்நிலையில் இயக்குனர் ஶ்ரீ கணேஷ், பிரபல நடிகை சுஹாசினி சஞ்சீவை கடந்த செப்டம்பர் 2022-ல் திருமணம் செய்துள்ளார். சுஹாசினி சஞ்சீவ், தமிழ் சினிமாவில் நெஞ்சுக்கு நீதி, வனம், சர்பத், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்