ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்களுடன் இணைந்து முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவற்றுக்காக ஆஸ்கார் விருதுகள் வரை பல விருதுகளையும் பெற்றவர்.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமணம் கடந்த 2022 மே மாதம் நடந்தது. மணமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியர் ஆவார். இவர் Waves Audio மற்றும் Audinate போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய சான்றளிக்கப்பட்ட பொறியாளர். ரஹ்மானின் மகள்கள் தற்போது அவருடைய தயாரிப்பு புராஜக்ட்களை செய்துவரும் இளம் தயாரிப்பாளர்களாக விளங்கி வருகின்றனர்.