அஞ்சலி செலுத்த திரண்ட தெலுங்கு திரையுலகம்.
அஞ்சலி செலுத்த திரண்ட தெலுங்கு திரையுலகம்.

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பல சினிமா பிரபலங்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்தும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன் மகேஷ் பாபுவுக்கும் ஆறுதல் கூறி அவரை தேற்றி வருகின்றனர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்