ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம்
ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம்

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

இவர் கடந்த 2022, அக்டோபர் 28-ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் நர்மதா உதயக்குமாருடன் திருமணம் செய்துகொண்டார்.