என்னோட ட்ரீம் பாய் இவங்கள மாதிரி இருக்கணும் - பிரியா வாரியர் ஓபன் டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைத்தள சென்சேஷன் நடிகை பிரியா வாரியர் தனது ட்ரீம் பாய் குறித்து மனம் திறந்துள்ளார்.

Wink girl Priya Varrier revealed about her dream man

மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் மூலம் ஒரே இரவில் சமூக வலைத்தள பிரபலமானாவர் நடிகை பிரியா வாரியர். பிரியா பிரகாஷ் வாரியர் புருவத்தை அசைத்து கண்ணடிப்பதிலும், துப்பாக்கிச் சுடுவது போல் முத்தம் கொடுப்பதும் வைரலானது.

பிரியா வாரியர், ரோஷன் நடிப்பில் ஓமர் லுலு இயக்கியுள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.14) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசானது.

இந்நிலையில், சமீபத்தில் பிரியா வாரியர் அளித்த பேட்டி ஒன்றில், தனது ட்ரீம் பாய் எப்படி இருக்க வேண்டும் என்பதை மலையாள நடிகர்களுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் போன்ற உடல் வாகுடனும், ஃபகத் ஃபாசில் போன்ற சிரிப்புடனும், டோவினோ தாமஸ் போன்ற முடியும் இருக்க வேண்டும். அபப்டி இருந்தால் அவரிடம் காதலில் விழுந்துவிடுவேன் என பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.