STM Banner USA
VRV Banner USA

இந்த காதலர் தினத்தில்? மறைமுகமாக அறிவித்த அனிருத்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் அனிருத்.  அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்று அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது.

Anirudh tweets about his valentines day single release

அதனைத் தொடர்ந்து விரைவிலேயே விஜய், அஜித் தற்போது ரஜினிகாந்த் என தமிழ் முன்னணி நடிகர்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்தார். தற்போது ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்துக்கும் அவர் தான் இசையமைப்பாளர்.

படங்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கிள் ஆல்பங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். மேலும் கடந்த சில வருடங்களாக காதலர் தினத்தை முன்னிட்டு அவரது பாடல்கள் வெளியாவது வழக்கமாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஆக்கோ என்ற பெயரில் எனக்கென யாருமில்லையே என்ற பாடல் வெளியானது.  அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அவளுக்கென, 2017 ல் ஒன்னுமே ஆகல, 2018ல் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் இந்த வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு என்ன பாடல் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் உண்டானது.

இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், 2015, 2016, 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வெளியான பாடல்களை குறிப்பிட்டு 2019 ? என கேள்வி எழுப்பியுள்ளார்.