‘என்.ஜி.கே’டீசர் அப்டேட் - காதலர் தினத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya's 'NGK' teaser will be releasing on Valentines Day

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். 

இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ‘என்.ஜி.கே’ படத்தின் ஷூட்டிங் தாமதமானதையடுத்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா பிஸியானார்.

தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கை எட்டியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்.14ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘என்.ஜி.கே’ அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த சூர்யா ரசிகர்கள் மத்தியில் ‘என்.ஜி.கே’ டீசர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.