சூர்யா - சுதா கொங்காராவின் புது படம் எப்போது தொடங்குகிறது?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துவருகிறார். இதில் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.

Suriya and Sudha kongara film will start from march

அதனைத்தொடர்ந்து சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  உருவாகி வரும் காப்பாண் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

இவர்கள் கூட்டணியில் வெளியான அயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதனை அடுத்து நடிகர் சூர்யா இறுதிச் சுற்று இயக்குநர் சுதா  கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் இந்தியாவின் சண்டிகர், அமெரிக்கா ஆகிய இடங்களில் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த படத்தை சூர்யாவே தனது 2டி புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கவிருக்கிறார்.