‘ரங்கீலா’.. மலையாளத்தில் அறிமுகமாகும் சன்னி லியோன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

Sunny Leone to make her Malayalam debut in Rangeela

பாலிவுட்டில் பிரபலமான நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய ரசிகர்களுக்காக முழு நீள தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் வரலாற்று சரித்திரப்படமான ‘வீரமாதேவி’ திரைப்படத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நேரடி மலையாள திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சந்தோஷ் நாயர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாகவுள்ளது. ‘ரங்கீலா’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பேக் வாட்டர்ஸ் ஸ்டூடியோஸ் பேனரில் ஜெயலால் மேனன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.