சூர்யா - ஹரியின் 6 வது படத்தின் பெயர் யானையா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருடன் மோகன்லால் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Suriya - Hari next film title Yaanai is rumour

இதனையடுத்து சூர்யா இயக்குநர் ஹரி இயக்கும் யானை என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதனை உறுதி செய்ய அணுகிய போது எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்பதும் வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்பதும் தெரியவந்துள்ளது.

நடிகர் சூர்யா காப்பான் படத்துக்கு பிறகு மார்ச் மாதம் முதல் இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதனை சூர்யாவே தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Suriya, Hari, Yaanai, AVM