குட்டிக் கரணம் அடித்த ஹனிச்காவுக்கு கையில் காயம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘மஹா’ திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஷூட்டிங்கில் நடிகை ஹன்சிகா காயமடைந்தார்.

Actress Hansika gets injured in Maha’s stunt sequence

திரைப்படங்களில் நடிக்கும் திறனை வெளிப்படுத்துவதுடன் நடிகர்கள் அர்ப்பணிப்புடன் தங்களது பணியில் ஈடுபடுவது வழக்கம். இது அவர்களுக்குள் இயல்பாகவே இருக்கின்ற ஒரு குணம்.

குறிப்பாக பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் கதை மொத்தமும் நாயகியைச் சுற்றியே நடப்பதால், அதில் நடிக்கும் நடிகைகள் கூடுதல் சிரமம் எடுக்க வேண்டி இருக்கும்.

அந்த வகையில் நடிகை ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் ஹனிச்கா தரையில் குட்டிக்கரணம் அடிக்கும் போது தவறி விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் நடிகை ஹன்சிகா மீண்டும் அந்த சண்டைக் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். தனித்துவம் வாய்ந்த ‘மஹா’ திரைப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும். யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.