-18 டிகிரியில் புது வெள்ளை மழை..! உறைப்பனியில் உருகும் பிரபல நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

At -18' this top heroine thinks of Maniratnam-A.R.Rahman's song company

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, கடந்த ஆண்டு தனது ரஷ்ய காதலர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், -18 டிகிரியில் கொட்டும் பனி மழையில் நனைந்தபடி, மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமானின் க்ளாஸிக் காதல் பாடலை  முணுமுணுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்திய பெண் எங்கு சென்றாலும் மனதளவில் அவள் இந்தியர் தான் என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/p/Bs_kjJdnhX4/