ஹன்சிகா ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகை ஹன்சிகாவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Actress Hansika's Twitter handle hacked

பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் த்ரிஷா, சித்தார்த், அருண் விஜய் உள்ளிட்டோரின் ட்விட்டர் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்ட நிலையில், நடிகை ஹன்சிகாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.

ஆகவே தனது ட்விட்டர் ஹேண்டிலிலிருந்து வரும் ரேண்டம் மெஸ்ஸேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டியுள்ளார். மேலும், தனது பேக் எண்ட் குழு அதனை சரி செய்து வருவதாகவும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தற்போது ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மஹா’ படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டீசர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.