இந்த வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் காதல் பரிசு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'3' படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். தொடர்ந்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைத்து பிரபல  நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

Vignesh Shivn and Anirudh's Jersey starring Nani single release in valentines day

மேலும் ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் தனிப் பாடல்கள் வெளியிடுவதை அனிருத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு எனக்கென யாருமில்லையே என்ற பாடலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 2016 ல் அவளுக்கென, 2017ல் ஒண்ணுமே ஆகல, 2018 ல் ஜூலி போன்ற பாடல்களை வெளியிட்டார் . இந்த பாடல்களுக்கு ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பு இருந்தது.

மேற்சொன்ன பாடல்களில் பெரும்பாலானவை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியது. தற்போது இந்த வருடம் காதலர் தினம் வரவிருப்பதால் இந்த வருடத்தின் எந்த பாடல் வெளியாகும் என ரசிகர்களிடேயே எதிர்பார்ப்பு இருந்தது.

அதனை பூர்த்தி செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அனிருத் இசையில் நானி, ஸ்ரதா ஸ்ரீநாத் நடித்து வரும் ஜெர்சி படத்திலிருந்து அவர்  மறக்கவில்லையே என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளார்.

'ஜெர்சி' திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த  படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்திற்கு இது இரண்டாவது தெலுங்கு படமாகும்.  கடந்த ஆண்டு வெளியான பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அக்னயாதவாசி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியிருந்தார்.