Dev All Banner USA

முரட்டு சிங்கிள்ஸ் திருட்டு சிங்கிள்ஸ்க்கு காதலர் தின வாழ்த்துக்கள்- நையாண்டி ட்வீட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சதீஷ் காதலர் தினத்தை முன்னிட்டு தனது ஸ்டைலில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Murattu Singles Vs Thiruttu Singles - Actor Sathish wishes for Valentines Day

‘தமிழ்ப்படம்’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் சதீஷ் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அவ்வப்போது ட்விட்டரில் தனது கருத்துக்களை கேலியும், கிண்டலுமாக பகிர்ந்து வரும் சதீஷ் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், என்னை போல உண்மையான முரட்டு சிங்கிள்ஸ்க்கும், அப்டின்னு சொல்லி ஊற ஏமாத்துற திருட்டு சிங்கிள்ஸ்க்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என ட்வீட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்திற்கு அனைவருக்கும் ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’.. ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லெவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே என்று நடிகர் சதீஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.