சந்தேகமே வேண்டாம் ! 'விஸ்வாசம்' தமிழ்சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித், நயன்தாரா, யோகிபாபு, அனிகா, ரோபோ ஷங்கர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை பேசிய இந்த படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது.

KJR Studios announced Ajith's Viswasam Unstoppable Hit

சிவா இயக்கிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, விஸ்வாசம் திரைப்படம் தடுத்து நிறுத்த முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

இன்னும் சந்தேகமா ?  உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய எங்கள் அலுவலகத்தின் கதவுகள் திறந்திருக்கிறது.

தயாரிப்பாளர் விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் இந்த நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது. அனைவரும் கொண்டாடிக்கின்றனர்.  சந்தேகமே வேண்டாம் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றி எங்களுடையது மட்டுமல்ல. உங்களுடையதும் தான்என்று பதிவிட்டுள்ளது.