லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐராவில் இருந்து வெளியான முதல் பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஸ்வாசம் வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடித்துவரும் படம் ஐரா. இந்த படத்தை எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கியிருக்கிறார்.

Lady superstar Nayanthara's first single from Airaa

இவர் லக்ஷ்மி, மா என்ற இரண்டு குறும்படங்களின் மூலம் பிரபலமானவர். இந்த படத்தில் கலையரசன் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. டீஸரை வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து மேகதூதம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தாமரை எழுதியுள்ள இந்த பாடலை பத்மபிரியா ராகவன் பாடியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐராவில் இருந்து வெளியான முதல் பாடல் VIDEO