ஐராவில் நயன்தாராதாவின் கேரக்டர்? - இயக்குநர் விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தான் ஏற்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் தனித்துவமாக செய்வதில் வல்லவர் நயன்தாரா.  தற்போது கதாநாயகிகளை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு படங்கள் அதிகம் வருவதற்கும் அவர் காரணமாக இருக்கிறார்.

Airaa director Sarjun reveals Nayanthara's Character

இந்நிலையில் தற்போது அவர் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் ஐரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைக்க சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பாக கோட்டபாடி கே. ராஜேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான அறம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் குறித்தும் நயன்தாரா குறித்தும் இயக்குநர் சர்ஜுன் தெரிவித்ததாவது, இது நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.