விஜய் 63: ரசித்து ரசித்து மியூசிக் கேட்கும் அட்லி.. ரகுமானின் வார்த்தைகளால் அட்லி பரவசம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘மெர்சல்’, ‘சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.ரகுமானின் ஹாட்ரிக் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது.

It’s a lifetime achievement for a fanboy like me, Atlee overwhelmed by A.R.Rahman's appreciation

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகவிருக்கும் பாடல்கள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், ‘ஹாலிவுட்டில் இது போன்ற இசை அமைத்திருக்கிறேன். ஆனால் தென்னிந்தியாவில் விஜய்யின் ‘தளபதி 63’ படம் தான் முதல் முறை. அட்லி நான் பணியாற்றிய ‘பீலே’, ‘லகான்’ போன்ற திரைப்படங்களில் எனது இசையை கூர்மையாக கவனித்து ரசித்து பார்த்துள்ளார்.

அந்த படங்களில் வரும் மிக்சிங், பிஜிஎம்-ஐ கூறி அது போன்று வேண்டும் என்பார். மிகவும் உணர்ச்சிகரமான இயக்குநர், ரசித்து ரசித்து என்னிடம் மியூசிக் கேட்பார். அதுபோன்ற இயக்குநர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எது கொடுத்தாலும் ஓகே என பேருக்கு வேலை செய்யாமல், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார் என ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாராட்டு குறித்து இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில தருணங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்து இருக்கும், இதுவும் அது போன்ற ஒன்று தான். நான் பார்த்து ரசித்து, மதிக்கும் ஒருவர் எனது பணியை பாராட்டி பேசிய இந்த வார்த்தைகள் போதும் எனக்கு. ஒரு ரசிகனாக வாழ்நாள் சாதனை படைத்தவனாக உணர்கிறேன். மிக்க நன்றி சார். மேலும் உத்வேகத்துடன் உழைக்க இந்த வார்த்தைகள் உதவும் என ட்வீட்டியுள்ளார்.