தனுஷூடன் இணையும் காதல் இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தனுஷ் - வெற்றிமாறன் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் அசுரன். வி கரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Dhanush joins with Balaji Sakthivel for Vetrimaaran's Asuran

எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும்  இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.