கண்ணே கலைமானே - திரையரங்கில் பெண்கள் சாமியாட்டம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் 'கண்ணே கலைமானே' . இந்த படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து  பாடல்கள் எழுதியுள்ளார்.

Group of people Saamyaattam in theatre Udhayanidhi's Kanne kalaimaane theatre

இந்நிலையில் மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்ற ஊரில் ஒரு திரையரங்கில் இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சில பெண்கள் திரைக்கு முன்னால் சென்று சாமியாட்டம் ஆடியுள்ளனர்.

இந்த வீடியோவை படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கண்ணே கலைமானே படத்தில் பெண்கள் சாமியாட்டம், பதிவு செய்து அனுப்பி மனோஜ்க்கு நன்றி என்று குறிப்பட்டுள்ளார்.

முன்பு அம்மன் போன்ற சாமி படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது பெண்கள் திரைக்கு முன்பு வந்து சாமியாடுவதை காண முடியும். தற்போது கண்ணே கலைமானே படத்திற்கு சாமியாட்டம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.