உதயநிதி-தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ இப்படி தான் உருவானது

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் இன்று (பிப்.22) உலகம் முழுவதும் ரிலீசானது.

Udhayanidhi Stalin’s Kanne Kalaimaane Making video released

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா,  பூ ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மதுரை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயற்கை விவசாயம், காதல், குடும்ப உறவு, ஆண்-பெண் சமத்துவம் போன்றவற்றை மிகவும் எதார்த்தமாக இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார். இப்படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. எதார்த்தமான கிராமத்து இளைஞனாக நடித்துள்ள உதயநிதி, ட்ராக்டர் ஓட்டி, ஏறு உழுது இயற்கை விவசாயி கதாப்பாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார்.

சுமார் 28 நாட்களில், இரண்டே ஷெட்டியூலில் இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழு மின்னல் வேகத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி-தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ இப்படி தான் உருவானது VIDEO