தமிழ் சினிமாவில் யார் ஹாட் ? யார் ஸ்மார்ட் ? தல, தளபதி குறித்து பிரபல நடிகை கருத்து

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே' . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

Tamannaah shares his experience Kanne kalaimaane and Udhayanidhi

இந்த படத்திலிருந்து பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை  கவர்ந்துள்ளது . இந்த படம் நாளை ( பிப்ரவரி 22 )  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நடிகை தமன்னா Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் நடித்ததிலேயே அவருக்கு பிடித்து பாடல் குறித்து கேட்ட போது, அடடா மழ டா என்ற பாடலை சொன்னார். தொடர்ந்து பேசிய அவர் யுவன் ஒரு ஜீனியஸ். அவர் எல்லாவிதமான படங்களுக்கும் இசையமைக்க முடியும். 'பையா' போன்ற கமர்ஷியல் படத்துக்கும் 'கண்ணே கலைமானே' போன்ற படத்துக்கும் அவரால் இசையமைக்க முடியும் என்றார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் யார் ஹாட் ?  யார் ஸ்மார்ட் என தமன்னாவிடம் தொகுப்பாளர் கேட்டார். அவருக்கு விஜய், அஜித் என இரண்டு தெரிவுகள் கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அஜித் ஹாட் எனவும், விஜய் ஸ்மார்ட் எனவும்  பதிலளித்தார்.

தமிழ் சினிமாவில் யார் ஹாட் ? யார் ஸ்மார்ட் ? தல, தளபதி குறித்து பிரபல நடிகை கருத்து VIDEO