'சினிமா பிரிவியூ காட்சிகளையும் அரசியல் 'கூட்டணிகள்' தான் தீர்மானிக்கின்றன'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்கு பிறகு சீனுராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே'. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

seenu Ramasamy Tweets about his Udhayanidhi's Kanne Kalaimaane

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வருகிற 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், என் எல்லாப்படங்களையும்  சர்வக்கட்சி தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரைபிடல் செய்யவதுண்டு ,
இம்முறை திரு,உதயநிதி செல்வி தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும்  #கண்ணேகலைமானே திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை.
கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்..
என்று குறிப்பிட்டுள்ளார்.