நான் தான் கட்டிப்பிடிப்பேன்.. விஜே நிக்கிக்கு பங்கமாக டாஸ்க் கொடுத்த LKG ஹீரோயின்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் LKG. கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி நடித்துள்ள இப்படம் வரும் பிப்.22ம் தேதி ரிலீசாகவுள்ளது.

LKG heroine Priya Anand badly trolled VJ Nikki in an recent interview

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீசையொட்டி நடிகை பிரியா ஆனந்த் Behindwoods தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாலாஜியை வெகு நாட்களாகவே தெரியும். அவர் இந்த கதையை சொன்னதும் எனக்கு பிடித்துவிட்டது. மிகவும் வலுவான கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விஜே நிக்கியின் ஹக் மீ, கிஸ் மீ, ஸ்லாப் மீ செக்மெண்ட்டில் நிக்கிக்கு பல வினோதமான டாஸ்குகளை கொடுத்தார். நிக்கியின் பெரும்பாலான கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த பிரியா ஆனந்த், நிக்கிக்கு பெண் வேடமிட்டு புதுவிதமான டாஸ்க்கை கொடுத்து பேட்டியை கலகலப்பாக்கினார்.

நான் தான் கட்டிப்பிடிப்பேன்.. விஜே நிக்கிக்கு பங்கமாக டாஸ்க் கொடுத்த LKG ஹீரோயின் VIDEO