தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ஃபர்ஸ்ட் லுக் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 59’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Ajith Kumar's 'Thala 59' First look unveiled, film titled as Nerkonda Paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அமைதியாக ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்புடன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே.1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.